இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது.
ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வாஷிங்டனில் இருந்து ஒரு குழு டெல்லிக்கு வருகை தரும் போது பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்தியா டுடே செய்தி தெரிவித்தது.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் ஒரு விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (BTA) இறுதி செய்ய இரு நாடுகளும் இலக்கு வைத்துள்ளன.
சமீபத்திய ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தையில், வாஷிங்டனில் இந்திய பேச்சுவார்த்தையாளர்கள், வாகன கூறுகள், எஃகு மற்றும் விவசாய பொருட்கள் மீதான வரிகள் தொடர்பான முட்டுக்கட்டையை உடைக்க முயன்றனர்.
இழுபறியாக இருந்த பேச்சுவார்த்தைகளில் இந்த பொருட்கள் மீதான வரிகள் முக்கிய பிரச்சனைகளாக வெளிப்பட்டுள்ளன.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கும்
