நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு ரூ.27,600 கோடி மதிப்பில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் (பூஞ்சேரி) வரை 92 கிமீ கடல்வழி சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் முக்கிய சாலைகளில், காலை மற்றும் மாலை நேரங்களில் காணப்படும் கடும் நெரிசல் பொதுமக்கள், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளைப் பெறுபவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், சொந்த வாகனப் பயன்பாடு அதிகரிப்பதால், நெரிசல் குறைவதற்குப் பதிலாக தொடர்ந்து உயரும் நிலை காணப்படுகிறது.
எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை கடல்வழி சாலை -சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு தொடக்கம்
