சத்தீஷ்கர் மாநிலம் தஸ்குடா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருவியில் குளிக்க வந்த இளைஞர் ஒருவர், தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூடும் இந்த அருவியில், அதிகமான நீர் வீழ்ச்சி மற்றும் பாறைகள் இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அவசியமாக இருந்தது.
சம்பவத்தன்று, அந்த இளைஞர் அருவியின் மேல்மட்டத்திற்கு ஏறிச் சென்றார். அப்போது அவரது கால் வழுக்கி, கண்ணிமைக்கும் முன் 60 அடி ஆழமுள்ள பள்ளத்தில் நீர் விழும் வேகத்தில் கீழே விழுந்துள்ளார். இதன் விளைவாக பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் தவித்தார்.
छत्तीसगढ़ के बलौदा बाजार से सिहरन पैदा कर देने वाला वीडियो सामने आया है. यहां एक झरने में मौज मस्ती करने आया लड़का 65 फीट की ऊंचाई से फिसलते हुए पानी में गिर गया. इस हादसे में लड़का के शरीर की चार हड्डियां टूट गई हैं और चोटें में आई हैं.
दरसअल, मानसून की बारिश से धसगुड़ झरना… pic.twitter.com/4buPBxjcFD
— AajTak (@aajtak) July 28, 2025
“>
உடனடியாக அருகில் இருந்த சுற்றுலா பயணிகள் அவரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பாதுகாப்பு கவனிக்கப்படாத இடங்களில் சுற்றுலா பயணிகள் கடுமையாக நடந்து கொள்வது தற்காலிக மகிழ்ச்சிக்கு பின்னர் ஆபத்தாக முடிகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.