சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 9ஆம் நாளிரவு தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர் ராமாஃபோசாவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
சீனாவும் தென் ஆப்பிரிக்காவும் முக்கிய வளரும் பெரிய நாடுகளாகும். இரு நாட்டு உறவு, பரந்த வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பேணிகாப்பதற்கும் சீன-ஆப்பிரிக்க ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வழிநடத்துவதற்கும் நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டு பிரிக்ஸ் ஒத்துழைப்பின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதைச் சீனா ஆதரிக்கிறது என்றார்.
உக்ரைன் நெருக்கடி குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அரசியல் மூலம் உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது பற்றி சீனா முன்வைத்த நிலைப்பாட்டு ஆவணத்தைத் தென் ஆப்பிரிக்கா ஆதரிப்பதாக ராமாஃபோசா தெரிவித்தார்.