சென்னை : கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அப்பொழுது, “எங்களுக்கு இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கிற மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோசமா இருக்கு. எங்க ஸ்கூல் போர்டுல ஐஏஎஸ் ஆனவங்களோடு பேரு இருக்கற மாதிரி என் பெயரும் சீக்கிரம் வரும். உங்க உடல் நலம் நல்ல இருக்க வேண்டும்னு நாங்க கடவுள் கிட்ட வேண்டிகிட்டே இருப்போம்”என்று அரசு பள்ளி மாணவிகள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.