சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் நிரந்தர குழுவின் 13ஆவது கூட்டம் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 15ஆவது ஐந்தாண்டு திட்டம் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசிய கமிட்டியின் தலைவருமான வாங் ஹூநிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணை தலைமை அமைச்சருமான டிங் சுய்சியாங் உரை நிகழ்த்தினார்.
வாங் ஹூநிங் கூறுகையில்,
15ஆவது ஐந்தாண்டு திட்டக் காலம், சோஷலிச நவீனமயமாக்கத்தை நனாவாக்கும் முக்கிய காலக்கட்டமாகும். இதனால், இந்தத் திட்டத்தைச் சீராக வகுக்க வேண்டும் என்றார்.
அப்போது டிங் சுய்சியாங் கூறுகையில்,
15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பது, சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது தேசிய மாநாட்டின் பரவலை நடைமுறைப்படுத்துவதற்கும் சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தை நனவாக்குவதற்கும் மிக முக்கியமானது என்றார்.