அமெரிக்கா இந்தியா இடையே வரி விதிப்பு ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர புதின் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் அவர்களுக்கு கிடைக்கும் பணம் உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இருக்கிறது என அமெரிக்கா குற்றம் சாட்டியது.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்கினால் இந்திய பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக வரி விதிக்கப்படும் என மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாததால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தது.
இந்த வரி விதிப்பு தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டெலிபோன் மூலம் பிரதமர் மோடியை நான்கு முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை.
தற்போது இந்திய சந்தையில் அமெரிக்க விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி அதற்கு அடி பணியாமல் அமெரிக்காவின் நெருக்கடியை சமாளித்துக் கொள்வோம் என கூறியுள்ளார்.