நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்: மீண்டும் இளைஞர்கள் போராட்டம்.., களமிறங்ங்கிய ராணுவ வீரர்கள்!

Estimated read time 0 min read

காத்மண்ட் : நேபாளத்தில் தவறான சமூக ஊடக பயன்பாட்டை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு காலக்கெடுவுக்குள் ஒத்துழைக்கவில்லை என கூறி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உட்பட 26 சமூக ஊடக தளங்களுக்கு கடந்த வாரம் நேபாள அரசு தடை விதித்தது.

இதனை தொடர்ந்து, சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விதிக்கப்பட்டதற்கு, இளைஞர்கள் தலைமையிலான பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. நேபாள தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.

நேற்றைய தினம் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் பலி, 300 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், துப்பாக்கிசூட்டில் 19 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடந்து வருகிறது.

முன்னதாக, நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து 26 சமூக வலைதளங்கள் மீதான தடையை நீக்கியது கே.பி.சர்மா ஒலி அரசு. அதுமட்டுமின்றி, நேற்று நடந்த வன்முறையில் 19 பேர் உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் அறிக்கை வெளியிட்டார்.

மேலும், கலவரம் குறித்து விசாரணை செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்படும் எனவும், அடுத்த 15 நாட்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author