ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் அவசியம் என அறிவித்தது.
மேலும், ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் தவிர, மற்றவர்கள் 2 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அவ்வாறு தேர்ச்சி பெறாதவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு?
