ஆய்வு நுட்பங்களோடு சங்க இலக்கியங்களை மீளாய்வு செய்து வருகிறார் ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளி, பண்டைய தமிழகம் ஆகிய இருதுருவப் பிரதேசங்களையும் சங்க இலக்கியம் இணைக்கிறது எனும் கருதுகோளை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை.
இது முற்றிலும் ஒரு புதிய விசாரனை முறை, திராவிடவியல் ஆய்வில் இது ஒரு புதிய உச்சம் எனலாம். தேர்ந்த முறையில், சுதேசியான கோட்பாட்டுப் பின்புலம், ஐரோப்பிய மையவாதத்தைச் சாராமை, தரவுகளிலிருந்து கோட்பாடு நோக்கி நகர்தல் சுய பிரக்ஞை முதலான இன்னும் பல அம்சங்கள் இவருடைய ஆய்வு முறையியலில் பளிச்செனத் தென்படுகின்றன.
“ஓர் ஏர் உழவன்” என்பது வரலாறு, பண்பாடு, நிலம், சமூக நிகழ்வுகள் மற்றும் நம் மூதாதையர் நடைமுறைகளைப் பற்றி ஆழமான பார்வையைத் தரும் ஆய்வுநூல். ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணன் தனது பன்முக அனுபவங்களையும், புள்ளிவிவரங்களையும் கொண்டு தமிழகத்தின் நிலத்தொடர்பான பண்பாட்டுக் கட்டமைப்பை ஆராய்கிறார்.
படித்த பின், நம் நிலம், நம் பேர், நம் வழிபாட்டு முறை — இவை எல்லாமே சுரண்டப்பட்ட வரலாற்றின் பிரதிபலிப்புகளாகவே தோன்றும்.
இந்த நூல், பள்ளி மாணவர்கள் முதல், சமூக ஆர்வலர்கள் வரை அனைவருக்கும் முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. தமிழ் நிலவியல், தொன்மவியல், தொன்மநூல்கள் குறித்தும் ஆழமான புரிதலை வளர்க்கும்.
நூல்: ஓர் ஏர் உழவன்
ஆசிரியர்: ஆர்.பாலகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 208
விலை: ரூ.190/-