பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, உலகத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தொலைபேசி மூலம் மோடியிடம் உரையாடி, தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் வாழ்த்து, சர்வதேச அளவில் இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட நட்புறவை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளாவது,
என் நெருங்கிய நண்பர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எனது 75வது பிறந்தநாளில் தொலைபேசி அழைப்புக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி.
உங்களைப் போலவே, இந்தியா-அமெரிக்க விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வதில் நானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான உங்கள் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.