இஸ்ரேல் : பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வுக்கு முன்னதாக, பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து நடத்தும் இரு-நாடு தீர்வு குறித்த மாநாட்டிற்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த முடிவை பாலஸ்தீனம் வரவேற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இதில், பெல்ஜியம் செப்டம்பர் 2 அன்று இந்த முடிவை உறுதிப்படுத்தியது, மேலும் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான தடைகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா முடிவை பாலஸ்தீனம் வரவேற்றுள்ளது.
இந்த அங்கீகாரம், அமைதியான தீர்வை எட்டுவதற்கான பாதுகாப்பாக அமையும் என பாலஸ்தீனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இவ்வாறு அங்கீகாரம் கொடுப்பதன் மூலம், இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுத்து காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என அந்நாடுகள் எதிர்பார்க்கின்றன.