புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து உயர்கல்விக்கும் 100 சதவீதம் கல்விக் கட்டண விலக்கு அளிக்கும் திட்டத்திற்கு ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த முடிவால் புதுச்சேரி அரசு கல்லூரிகளில் படிக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயனடைவார்கள்.
இந்த கல்வி உதவித்தொகை 2024-25-ஆம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.
புதுச்சேரியில் அனைத்து உயர்கல்விக்கும் 100% கட்டண விலக்கு: கவர்னர் ஒப்புதல்
