தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக பெரிதும் வரவேற்பைப் பெற்ற ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் 14ம் தேதி நானியின் தயாரிப்பில் வெளியான இப்படம், நீதித்துறையின் பின்னணியில் ஓர் உணர்வுப்பூர்வமான நாடகமாக அமைந்தது.
அதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர், இயக்குநர் தியாகராஜன் பெற்றதிலிருந்து, ரீமேக் தயாரிப்புப் பணிகள் பல மாதங்களாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்படம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு OTTயில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அசல் திரைப்படமான *’கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’* படத்தை ராம் ஜெகதீஷ் இயக்க, பிரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
தமிழில் ரீமேக் ஆகிறதா ‘கோர்ட்’ திரைப்படம்? தேவயானி மகள் இனியா நடிக்கிறாரா?
