வாஷிங்டன் : ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகள், உலகின் மிக முக்கியமான அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி துறைகளில் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கின்றன. 2025 ஆண்டுக்கான பரிசுகள், அக்டோபர் 6 முதல் தொடங்கி, அடுத்த சில நாட்களில் தொடர்ந்து அறிவிக்கப்படுகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரிசுகள், நார்வே நோபல் கமிட்டி மற்றும் ராயல் சுவீடிஷ் அகாடமி போன்ற நிறுவனங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, பரிசுத் தொகை 11 மில்லியன் சுவீடிஷ் க்ரோனாக்கள் (சுமார் 1 மில்லியன் டாலர்கள்) ஆகும். இன்று அக்டோபர் 10 அன்று, 2025 நோபல் அமைதி விருது அறிவிப்பு நடைபெறவுள்ளது. நார்வேயின் ஓஸ்லோவில் உள்ள நோபல் அமைதி மையத்தில் பிற்பகல் (இந்திய நேரம் படி மாலை) அறிவிக்கப்படும்.
இந்த விருது, உலக அமைதி, மோதல் தீர்வு, மனித உரிமைகள் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்புக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகள் போல, இந்த ஆண்டும் போர்கள் மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பான பிரமுகர்கள் கவனத்தில் இருக்கலாம். அறிவிப்பு நேரலையில் உலகம் காத்திருக்கிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நோபல் அமைதி விருது எதிர்பார்ப்பு, இன்றைய அறிவிப்பை மிகவும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
காசா போர், இந்தியா-பாகிஸ்தான் மோதல் ஆகியவற்றை தான் நிறுத்தியதாக ட்ரம்ப் பலமுறை கூறி, “எனக்கு விருது வழங்க வேண்டும்” என்று பேசியுள்ளார். 2018ல் கிழக்கு ஆசியாவில் அமைதி முயற்சிகளுக்காகவும், 2020ல் இஸ்ரேல்-அரபு உடன்பாடுகளுக்காகவும் அவர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், கமிட்டி அவரை புறக்கணித்தது. இன்று அவரது எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா என்பது உலகம் காத்திருக்கிறது.