சீன அரசவையின் தலைமை அமைச்சர் லீச்சியாங் நவம்பர் 20ம நாள் காலை சாம்பிய அரசுத் தலைவர் ஹிச்சிலெமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
லீச்சியாங் அப்போது கூறுகையில், சீனாவும் சாம்பியாவும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளாகும். கடந்த ஆண்டில் நடைபெற்ற சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றக் கூட்டத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டில் ஹிச்சிலெமா சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடனான சந்திப்பு, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்குப் புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
சாம்பியாவுடன் இணைந்து, தத்தமது மைய நலன்கள் மற்றும் முக்கிய கவனங்கள் குறித்து ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, இரு நாட்டு பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியறவை ஆழமாக்கி, நவீனமயமாக்க இலட்சியத்தை முன்னெடுத்து, மேலும் நெருங்கிய சீன-சாம்பிய பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
