சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன வெளியுறவு
அமைச்சருமான வாங்யீ 15ஆம் நாள் ஹாங்சோ நகரில் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர்
அல்பாரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பேச்சுவார்த்தையின் போது
ஸ்பெயினுக்கான விசா விலக்கு கொள்கையைச் சீனா நீட்டிக்க விரும்புவதாகவும், இதனால்
மேலதிக ஸ்பெயின் நண்பர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்வதை வரவேற்பதாகவும்
தெரிவித்தார். மேலும், இரு தரப்பும் பலதரப்பு ஒருங்கிணைப்பை நெருக்கமாக்கி மேலும்
நியாயமான உலக நிர்வாக அமைப்பு முறையைக் கைகோர்த்து கொண்டு உருவாக்க வேண்டும்
என்றும் வாங்யீ கூறினார்.
பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பில்
ஐரோப்பாவும் சீனாவும் ஊன்றி நிற்பது இரு தரப்பின் உரிமைகளுக்குப் பொருத்தமானது
என்றும், இதற்குப் பயனுள்ள பங்களிப்பை ஆற்ற ஸ்பெயின் விரும்புவதாகவும் அல்பாரஸ்
கூறினார்.