உலகில் புத்தாக்கத்தையும் ஒத்துழைப்பையும் பகிரக் கூடிய முக்கிய மேடையாக விளங்கும் 8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில், 461 புதிய தயாரிப்புகள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகள் சிறப்பாக காட்சிக்கு வைக்கப்பட்டன. உலகளவில் ஆசியாவில் மற்றும் சீனாவில் தயாரிப்புகளின் முதல் அறிமுகம் நிகழ்ச்சிகள் நடப்பு பொருட்காட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு கூட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான சீன சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சித் திட்டம் உறுதிப்படுத்தப்பட்டது. இது மூலம், பன்னாட்டு நிறுவனங்கள் மேலும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகளை பெற்றன.
சீனாவின் வளர்ச்சியுடன் இணைந்து, வெளிநாட்டு நிறுவனங்கள் உயர் தரமான வளர்ச்சி அடைந்து வருகின்றன. தற்போது, அவை சீனாவின் விரிவான தொழில்துறை ஆதரவு திறன்கள் மற்றும் புத்தாக்க நலன்களை பயன்படுத்தி நீண்டகால வளர்ச்சி அடைந்துள்ளன. இவ்வாண்டின் மார்ச் திங்களில் பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு ஒன்றில், சீனாவின் புத்தாக்க சூழ்நிலையானது தங்களது உலகளாவிய போட்டி ஆற்றலை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்கு ஆற்றியுள்ளது என்பதை சுமார் 60விழுக்காட்டு பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த காரணியின் பங்கு மேலும் அதிகரிக்க கூடும் என்று 50விழுக்காட்டு தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.
