குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததால், கடைவீதிகளிலும் தண்ணீர் ஆறு போல் பாய்ந்தது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனால் அருவிப்பகுதியில் வளைவை தாண்டித் தண்ணீர் கொட்டியது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் போலீசார் தடை விதித்தனர்.
முன்னதாகக் குற்றால அருவியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்ததால், கடைவீதிகளிலும் தண்ணீர் ஆறுபோன்று பாய்ந்தது.
இதனால் அருவிப் பகுதிக்குச் செல்லும் பாதைகளில் தடுப்புகள் அமைத்த போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
