அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்ததை அறிவிக்கும் விதமாக, இன்று (நவம்பர் 25) ‘துவஜாரோஹணம்’ (கொடியேற்றம்) நிகழ்வு கோலாகலமாக நடைபெற உள்ளது.
https://youtu.be/kmf9k5P9MLg?si=nwncW5SJ4kdxxgAX
பிரதமர் நரேந்திர மோடி, 161 அடி உயர கொடிக்கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றவுள்ளார்.
‘துவஜாரோஹணம்’ சடங்கு என்பது ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் முறையாக முழுமையடைந்துவிட்டதை குறிக்கும் அறிவிப்பாகும்.
இந்த சடங்கின் மூலம், கோவில் வெறும் கட்டுமான தளத்தில் இருந்து, ராமரின் முழுமையான தெய்வீக இருப்பிடமாக மாறியது என பிரகடனப்படுத்துவதாகும்.
இந்தச் சடங்கிற்குப் பிறகு, கோவிலின் அனைத்து 44 கதவுகளும் வழிபாடுகளுக்காகவும் சடங்குகளுக்காகவும் திறக்கப்படுகின்றன.
