வடக்கு கோவாவின் அர்போரா கிராமம், பாகா பகுதியில் உள்ள கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சோகச் சம்பவத்தில் விடுதி ஊழியர்கள் சுற்றுலாப் பயணி கள் உட்பட மொத்தம் 23 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களில் விடுதியில் தங்கி இருந்த நான்கு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சமையல் அறைப் பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, சிலிண்டர் வெடிப்பு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
