டிக்டோக் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, முதலீட்டுத் தடையைக் குறைத்து, பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவை குறித்து சீனாவும் அமெரிக்காவும் அடிப்படைக் கட்டுக்கோப்பு ரீதியிலான ஒத்தக் கருத்துக்களை எட்டியுள்ளன என்று சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தை பிரதிநிதியும் துணை அமைச்சருமான லீ சாங் காங் 15ஆம் நாளிரவு தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி, செப்டம்பர் 14,15 நாட்களில், சீனாவும் அமெரிக்காவும் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் பொருளாதாரம் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தையை நடத்தின. இதற்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தொடர்புடைய தகவல்களை வெளியிட்டார்.
அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார வர்த்தக பிரச்சினையின் அரசியல்மயமாக்கம், கருவிமயமாக்கம் மற்றும் ஆயுதமயமாக்கத்தை சீனா எதிர்த்து வருகிறது. நாட்டின் நலன்களையும் சீன முதலீட்டு நிறுவனங்களின் சரியான உரிமை நலன்களையும் சீனா உறுதியாக பேணிக்காக்கும். சட்டத்தின்படி அறிவியல் தொழில் நுட்ப ஏற்றுமதி தணிக்கையை சீனா நடைமுறைபடுத்தும். தவிரவும், நிறுவனத்தின் விருப்பத்தின்படி. சந்தை கோட்பாடு என்ற அடிப்படையில், நியாயமான வணிக பேச்சுவார்த்தையை நடத்த சீன அரசு ஆதரவளிக்கிறது என்றார்.