ஆசியான்-சீனா-வளைகுடா ஒத்துழைப்பு ஆணையம் முத்தரப்பு உச்சிமாநாடு மலேசியாவில் நடைபெற்றது. முன்கண்டிராத அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இம்மாநாடு முத்தரப்பு ஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது. இம்மாநாடு பிரதேச ஒத்துழைப்புக்கான முக்கிய மைல் கல்லாகும். பாரம்பரிய புவிசார் அரசியல் கூட்டணியைத் தாண்டி, புதிய யுகத்துக்குரிய ஒத்துழைப்புகளுக்கு இம்மாநாடு வழிகாட்டியுள்ளதாகச் சர்வதேசச் சமூகம் கருத்து தெரிவித்துள்ளது.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர கட்டுமானம் நடைமுறைக்கு வருவதுடன், இம்முதரப்பு ஒத்துழைப்பு அமைப்புமுறை முக்கிய புதிய மேடையாக மாற உள்ளது. புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளுக்கான முன்மாதிரியை உருவாக்குவதற்குரிய முக்கிய வழிகாட்டல் தன்மை வாய்ந்த மேடையாகவும் இம்மாநாடு விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.