“தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!”..மெகா பொதுக்கூட்டம்..நிமிடம் வாரியாக வெளியான பயண விவரங்கள்..!!! 

Estimated read time 1 min read

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்திற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ பயணத் திட்டம் தற்போது வெளியாகியுள்ளது.

வரும் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். அன்று மதியம் 2.15 மணிக்குத் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் மதியம் 3 மணி முதல் 4.15 மணி வரை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்த ஒரு மணி நேரப் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, மாலை 5 மணிக்குச் சென்னையிலிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்படுகிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டுச் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டு, அந்தப் பகுதியே போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author