ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், உலக சந்தையில் பெரும் பதற்றம் ஏற்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.
இன்று காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.305-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், போர் தீவிரமடைந்ததால் அடுத்த சில மணி நேரங்களிலேயே வெள்ளி விலை மீண்டும் தாறுமாறாக எகிறி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தரக் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சற்று முன் கிடைத்துள்ள அதிரடித் தகவலின்படி, வெள்ளி விலை கிராமுக்கு மீண்டும் ரூ.15 அதிகரித்து தற்போது ரூ.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.20,000 வரை அதிகரித்து, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.3,20,000 என்ற மலைக்க வைக்கும் விலையை எட்டியுள்ளது. போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், சாமானிய மக்களின் பட்ஜெட்டை முற்றிலுமாகச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதால் நகைக்கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
