தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்..!

Estimated read time 1 min read

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர்.  அதே நேரத்தில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.  இந்தாண்டு தேர்தல் நடைபெறுவதால் முன்கூட்டியே பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. 

இதற்கிடையில், தேர்வுகள் முடிந்ததை அடுத்து, மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.  தேர்வுகள் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்றது. ஏப்ரல் 20ஆம் தேதிக்குள்  12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துள்ளன.  

இதற்கிடையில், தேர்வு முடிவுகளுக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக  அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கான பணிகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது.  

அதே போல, 11ஆம் வகுப்பு அரியர் தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மே 4ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், முனகூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், தற்போதைய நிலவரப்படி பார்த்தால், மே 8ஆம் தேதியே முடிவுகள் வெளியிடப்படும். 

இதில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பினும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்படும். எனவே, மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

+2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in  என்ற இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை பார்க்கலாம். இந்த இணையதளத்திற்கு முதலில் சென்று 12th Higher Secondary result என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பிறந்த தேதி, பதிவு எண் உள்ளிட வேண்டும்.  இதன்பிறகு, பாட வாரியாக உங்களுக்கான தேர்வு முடிவுகள் தோன்றும். உங்கள் தேர்வு முடிவுகளை  சரிபார்த்துவிட்டு, download என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

மே 8ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகலாம். தேர்தல் முடிவுகள் மே  4 இருப்பதால் முன்கூட்டியே வெளியிடலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author