யுகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு சைரோபா பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “யுகாதி, குடி பட்வா, சைத்ர சுக்லாடி, சேத்தி சந்த், நவ்ரேஹ் மற்றும் சஜிபு சைரோபா ஆகிய புனிதமான பண்டிகைகளையொட்டி, மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் திருவிழாக்கள் வெவ்வேறு பெயர்களால் கொண்டாடப்படுகின்றன என்றாலும், அதன் மையப்பொருள் மகிழ்ச்சி என்பதாகும். நமது தேசத்தின் பல்வேறு முனைகளில் பாரம்பரிய புத்தாண்டின் தொடக்கத்தை இவை குறிக்கின்றன.
மேலும் நம்பிக்கை, செழிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றையும் குறிப்பிடுகின்றன. இந்தப் பண்டிகைகளை நாம் கொண்டாடும்போது, பாரதத்தின் கட்டமைப்பை வரையறை செய்யும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வை நாம் பிரதிபலிப்போம்.
இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் வளம், மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டுவரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.