சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் பயணம் பற்றி வாங்யீ அறிமுகம்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கெடுத்து, கிர்கிஸ்தான் மற்றும் எகிப்தில் அரசுமுறை பயணம் மேற்கொண்டது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறுகையில், இப்பயணத்தில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்,  20க்கும் மேலான நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இருதரப்பு மற்றும் பலதரப்பு தன்மையுடைய, பல்வேறு பிரதேசங்களை ஒருங்கிணைந்த இந்நிகழ்வுகளில், அவர் முன்மொழிவுகளை வழங்கி, ஒத்துழைப்புகளை முன்னேற்றி, நட்புறவை வலுப்படுத்தினார் என்றார். மேலும், இனிமையாக வெற்றி பெற்ற இப்பயணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புவியமைவு அரசியல் பிளவு ஆழமடைந்து, சர்வதேச ஒழுங்கு பாதிக்கப்பட்ட பின்னணியில், அமைதியை நாடுதல், நிலைத்தன்மையை முன்னேற்றுதல், வளர்ச்சியை நாடுதல் ஆகியவற்றைக் கொண்ட சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பார்ப்புக்கு இப்பயணம் பதிலளித்து, மாற்றமும் குழப்பமும் நிறைந்த உலகத்துக்கு சீனத் திட்டம் மற்றும் சீன ஞானத்தை வழங்கியுள்ளது என பல்வேறு ஊடகங்கள் தெரிவித்தன. இந்நிலையில், நம்பகமான கூட்டாளி மற்றும் பொறுப்புணர்வு கொண்ட பெரிய நாடான சீனாவின் உருவகம், மக்களின் மனதில் மேலும் ஆழமாகப் பதிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author