சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டனர்.
மேலும் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நள்ளிரவு முதல் அதிகாலை 2.15 மணி வரை நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
ஆயுதமேந்திய குழுக்கள் பணியாளர்கள் மீது குண்டுகளை வீசியது. அந்த குண்டுகள் பாதுகாப்புப் படைகளின் புறக்காவல் நிலையத்திற்குள் வெடித்தது..
உயிரிழந்தவர்கள் நரஞ்சேனா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஆர்பிஎஃப் 128 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
“பாளையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் மலை உச்சியில் இருந்து கண்மூடித்தனமாக சுட்டனர்.
இது நள்ளிரவு 12.30 மணியளவில் தொடங்கி அதிகாலை 2.15 மணி வரை தொடர்ந்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.