உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சரை திடீரென்று மாற்றியுள்ளார்.
பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் துணைப் பிரதமரான சிவிலியன் ஆண்ட்ரி பெலோசோவ் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வந்த செர்ஜி ஷோய்கு, ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் சக்திவாய்ந்த பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராக இதுவரை இருந்த நிகோலாய் பட்ருஷேவுக்குப் பதிலாக செர்ஜி ஷோய்கு நியமிக்கப்பட்டுள்ளார்.