சீனாவைப் புரிந்து கொள்ளுதல் என்னும் சர்வதேசக் கூட்டம் டிசம்பர் 2ஆம் நாள் குவாங்சோ நகரில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அதே நாள் இக்கூட்டத்துக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
அவர் கூறுகையில், சீனாவைப் புரிந்து கொள்ள விரும்பினால், சீனப் பாணி நவீனமயமாக்கத்தைப் புரிந்து கொள்வது முக்கியம். தற்போது, சீனாவின் எதிர்காலம், மனித குலத்தின் எதிர்காலத்துடன் நெருக்கமாக இணைந்துள்ளது.
பல்வேறு நாடுகளுடன் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, அமைதி மற்றும் வளர்ச்சி, ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பு, கூட்டுச் செழுமை ஆகியவற்றைக் கொண்ட உலக நவீனமயமாக்கத்தை நனவாக்க சீனா விரும்புகிறது என்றார்.