காளையார்கோவில் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நாவல் கனியான்மடத்தில் தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இங்கு, வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான காளைகள் சீறி பாய்ந்தன.
மாடுபிடி வீரர்கள் காளைகளை போட்டிபோட்டு அடக்க முயன்றனர். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.