பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை.

Estimated read time 1 min read

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை !கவிஞர் இரா .இரவி

பத்தோடு ஒன்றாய் வாழ்வதல்ல வாழ்க்கை
ஆயிரத்தில் ஒருவராய் உயர்வதே வாழ்க்கை
உங்களிடம் உயர்ந்த மனிதன் யாரென்றால்
உடன் யோசிக்காமல் நான் என்று கூறுங்கள்
சிறந்த மனிதன் யாரென்று கேட்டால்
சிறிதும் தயங்காமல் நான் என்று கூறுங்கள்
உங்களை நீங்கள் உயர்வாக எண்ணுங்கள்
உங்களை நீங்கள் தாழ்வாக எண்ணாதீர்கள்
என்னால் முடியும் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்
நடந்த நல்லவற்றை அடிக்கடி நினையுங்கள்
நடந்த தீயவற்றை அன்றே மறந்திடுங்கள்
முடியாது நடக்காது கிடைக்காது விட்டுவிடுங்கள்
முடியும் நடக்கும் கிடைக்கும் என்றே எண்ணுங்கள்.
மகிழ்ச்சியாகவே மனதை எப்போதும் வைத்திடுங்கள்
மகிழ்ச்சியை பிறருக்கு வாரி வாரி வழங்குங்கள்

Please follow and like us:

You May Also Like

More From Author