ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ச்சென் ஷு ஜுன் 20ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 53வது கூட்டத்தில் நிகழ்த்திய உரையில், மனித உரிமை விவகாரத்தில் சீனாவின் நிலைபாட்டை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், மக்களே முதன்மை என்ற கோட்பாட்டில் சீனா எப்போழுதும் ஊன்றி நின்று, நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய மனித உரிமை வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. தற்போது சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியையும் சமூக நிலைப்புத் தன்மையையும் கண்டு, மனித உரிமை துறையில் முன்னென்றும் கண்டிராத சாதனைகளைப் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நாவின் மனித உரிமைக்கான உயர் ஆணையர் அலுவலகத்துடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, உலக மனித உரிமை லட்சியத்தின் சீரான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு நேர்மறை ஆற்றலை ஊட்ட சீனா விரும்புகிறது என்றார்.