சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் பயன்னூர் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, கலந்துரையாடல் கூட்டம் ஒன்றுக்கு தலைமை தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார்.
பாலைவனமயமாதலுக்கு எதிரான ஒட்டுமொத்த தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி, வடகிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் காடு வளர்ப்பு உள்ளிட்ட முக்கிய சூழலியல் திட்டப்பணிகளை ஆழ்ந்த முறையில் முன்னேற்றுவது, நாட்டின் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியுடன் தொடர்புடையது.
தற்போதைய காலத்தில் வெற்றி பெறக் கூடிய இந்தப் பணி, எதிர்காலத்துக்கும் நலன் தரக்கூடிய உன்னத லட்சியமாகும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பொறுப்புணர்வுடன் இன்னல்களைச் சமாளித்து, விடா முயற்சிகளை மேற்கொண்டு, புதிய யுகத்தில் சீனாவின் பாலைவன மயமாதல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் புதிய அதிசயத்தை உருவாக்க வேண்டும்.
சீனாவின் வடக்கிலுள்ள இந்தப் பசுமை திரையை மேலும் உறுதியாக கட்டமைக்க வேண்டும். அருமையான சீனாவின் கட்டுமானத்தில் மேலும் பெரும் சாதனையைப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜுன் 5ஆம் நாள் பிற்பகல், ஷி ச்சின்பிங் உலியங்சூ ஏரிக்குச் சென்று, அங்குள்ள மலை, ஆறு, காடு, வயல், ஏரி, புல்வெளி மற்றும் மணல் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியையும் இயற்கைச் சூழல் மீட்சி நிலைமையையும் அறிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்த ஏரியின் தெற்கு கரையிலுள்ள நவீன வேளாண் துறையின் செயல் விளக்கப் பூங்காவில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு, உயர்தர வயல் கட்டுமானம் உள்பட பணிகளை அறிந்து கொண்டார். ஜுன் 6ஆம் நாள், பயன்னூர் நகரின் லின்ஹே பகுதியிலுள்ள சின்ஹுவா வன பண்ணையிலும், ஹேதாவ் நீர்ப்பாசனப் பகுதியிலுள்ள நீர் தகவல் கண்காணிப்பு மையத்திலும் அவர் பயணம் மேற்கொண்டார்.