அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான அலாஸ்கா உச்சி மாநாட்டை இந்தியா வரவேற்றுள்ளது.
உக்ரைன் போரில் அமைதியை மேம்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில் அவர்களின் தலைமை பாராட்டத்தக்கது என்று விவரித்துள்ளது.
புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ள நேரத்தில் உரையாடலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான அலாஸ்கா உச்சி மாநாட்டை இந்தியா வரவேற்கிறது.
அமைதியை நாடும் அவர்களின் தலைமை மிகவும் பாராட்டத்தக்கது.” என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.