சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 23ஆம் நாள், 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். அவர் முன்வைத்த 5 முன்மொழிவுகள், பிரிக்ஸ் ஒத்துழைப்பு புதிய கட்டத்துக்கு உயர்வதை முன்னேற்றி, பிரிக்ஸ் நாடுகளும், “உலகின் தென் பகுதியிலுள்ள நாடுகளுக்கும்” மேலதிக வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் என்று பல நாட்டவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் அக்டோபர் 24ஆம் நாள் கூறுகையில், பிரிக்ஸ் அமைப்பின் நாடுகளுடன் இணைந்து, “பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பின்” உயர்தர வளர்ச்சியின் புதிய நிலைமையை உருவாக்கி, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்துக்கு பிரிக்ஸ் பங்காற்ற சீனா விரும்புகிறது என்றார்.
மேலும், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பல புதிய முன்மொழிவுகள் மற்றும் நடவடிக்கைகள், வளர்ச்சிப் போக்கிற்குப் பொருத்தமாக உள்ளன. பிரிக்ஸ் நாடுகளின் பொது விருப்பங்களையும், பிரிக்ஸ் ஒத்துழைப்புகளை முன்னேற்றுவதற்கான சீனாவின் மனவுறுதியையும் இவை வெளிப்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்புமுறை உருவாக்கப்பட்ட கடந்த 18 ஆண்டுகளாக, சர்வதேச மேடையிலுள்ள முக்கிய ஆற்றலாக மாறியுள்ளது. பிரிக்ஸ் வளர்ச்சிக்கு சீனா முன்மொழிவுகளை வழங்குவது மட்டுமல்லாமல், பிரிக்ஸ் ஒத்துழைப்பு ஆழமாக செயல்படுத்தப்படுவதையும் முன்னேற்றி வருகிறது என்றும் லின்ஜியான் தெரிவித்தார்.