ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியானது. இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கண்டறிய 3D வரைபடம் மூலம் துப்பறியும் பணி தொடங்கியுள்ளது.
சம்பவ இடத்தில் 3D வரைபடம் உருவாக்கும் பணியில் என்.ஐ.ஏ ஈடுபட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் துப்பறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் எந்த பகுதி வழியாக நுழைந்தனர்?
எந்த பக்கமாக வெளியேறினார்? உள்ளிட்ட தகவல்களை கண்டறிய உதவும். 3D வரைபடம் தொழில்நுட்பம் மூலம் பயங்கரவாதிகள் தலைமறைவாக இருக்கும் இடத்தை கண்டறிய இது வாய்ப்பாக அமையும்