ஏழை மாணவர்களின் கல்வி.. ரூ.3400 கோடி சொத்தை வாரி வழங்கிய நடிகர் ஜாக்கிசான்…

Estimated read time 1 min read

புரூஸ் லீ-க்கு அடுத்தபடியாக அதிரடி ஆக்சன் காட்சிகளால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஜாக்கிசான் தான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

1985, போலீஸ் ஸ்டோரி, டிரங்கன் மாஸ்டர், ரஷ் ஹவர், கராத்தே கிட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் உலகம் முழுவதும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகிறது. இவரது நடிப்பில் கராத்தே கிட் 2-ம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில் ஜாக்கிசான் தனது சொத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனது ரூ. 3,400 கோடி சொத்துக்களை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் தனது ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் மூலம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, சிறுவயதில் இருந்தே வறுமையால் தவித்து இருக்கிறேன்.

அந்த கஷ்டம் எனக்கு தெரியும் நான் பட்ட கஷ்டங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்பதால் தான் இந்த முயற்சி. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோஷம் அளவிட முடியாது என்று குறிப்பிட்டார். ஜாக்கிசானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author