தமிழ்நாடு முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பாக ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வீட்டுவசதி போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“அமிரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், ரயில் கட்டமைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு வழிவகுத்து, தமிழ்நாட்டில் உள்ள 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“அமிரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், ரயில் கட்டமைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு வழிவகுத்து, தமிழ்நாட்டில் உள்ள 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் திரு அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்… pic.twitter.com/ShgsqNhHV3
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 26, 2024
அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த பொது வசதிகள் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு அதிக இணைப்பு, வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும்.
தொலைநோக்கு தலைமையின் கீழ், தமிழ்நாடு முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பாக ரயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வீட்டுவசதி போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
தற்போதைய திட்டங்கள் ₹45,769 கோடிக்கு மேல் உள்ளதால், மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட ஆயத்தமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.