பல்வேறு நாடுகளில் குற்றவியல் நிலை, பொது பாதுகாப்பு, மக்களிடையே நிம்மதி போன்றவற்றை மதிப்பீடு செய்து நம்பியோ (Numbeo) தரவுத்தளம் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு 2025-ற்கான பட்டியல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இப்பட்டியலில், ஐரோப்பாவில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையில் அமைந்துள்ள சிறிய நாடான ‘அன்டோரா’ பாதுகாப்பான நாடாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது 100-ல் 87.3 புள்ளிகள் பெற்று சாதனைப் பதிலாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் (86.7 புள்ளிகள்) மற்றும் மூன்றாவது இடத்தில் கத்தார் (85.7 புள்ளிகள்) ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. தொடர்ந்து தைவான், ஓமன் ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.
மொத்தம் 147 நாடுகள் இடம்பெரும் இந்த பட்டியலில், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66-வது இடத்தில் உள்ளது. தெற்காசியாவைச் சேர்ந்த சீனா 76 புள்ளிகளுடன் 15-வது இடத்தை பிடித்து மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது. இங்கிலாந்து (51.7 புள்ளிகள்) 87-வது இடமும், அமெரிக்கா (50.8 புள்ளிகள்) 89-வது இடமும் பெற்றுள்ளன. வெனிசுலா, பப்புவா நியூகினி, அஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பட்டியலின் கடைசி மூன்று இடங்களில் உள்ளன.
இந்த தரவுகள் உலக நாடுகளின் பாதுகாப்பு நிலையை அளக்க உதவும் முக்கியமான காட்டிகளாகக் கருதப்படுகின்றன. இதன் அடிப்படையில் சுற்றுலா, குடியேற்றம், வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட துறைகள் பயனடையக்கூடியவை.