சீனாவின் கடல் எல்லையில் இருந்து அமெரிக்க விரைவுக் கப்பலை பி.எல்.ஏ வெளியேற்றியது

ஹுவாங்யான் தீவு அருகே சீனாவின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய அமெரிக்க விரைவுக் கப்பலான ஹிக்கின்ஸை சீன இராணுவம் வெளியேற்றியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

சீன மக்கள் விடுதலை படையின் தெற்கு கடற்படையின் செய்தித் தொடர்பாளர் ஹீ டைசெங், சீன அரசாங்கத்தின் அங்கீகாரமின்றி ஹுவாங்யான் தீவு அருகே உள்ள கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை சட்டப்பூர்வமாகக் கண்காணிக்க, எச்சரிக்கைகளை வெளியிட மற்றும் வெளியேற்ற சீன இராணுவத்தின் தெற்கு போர் மண்டலப் பிரிவு ஒழுங்கமைத்ததாகக் கூறினார்.

அமெரிக்காவின் இந்தச் செயல் சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கடுமையாக மீறி, தென் சீனக் கடலில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குறைத்து, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளையும் மீறியுள்ளது என்று கூறினார். மேலும் தெற்கு கடற்படை வீர்ர்கள் தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதியாகப் பாதுகாக்க எல்லா நேரங்களிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர் என்று அவர் கூறினார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author