ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி சீனாவால் செப்டம்பர் 3ஆம் நாள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் 39 நாடுகளைச் சேர்ந்த 11613பேருடன் கருத்து கணிப்பு நடத்தியது.
உலகின் பாசிச எதிர்ப்புப் போரில் சீனா பெரும் பங்காற்றியுள்ளது என 73.6விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். 2ஆம் உலகப் போரில் சீனா, முக்கிய கிழக்கு போர்முனையாக இருந்தது என்று கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 39 நாடுகளில் 36 நாட்டினர் கூறினர்.
மேலும், ஜப்பானிய பாசிச ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்பு வரலாற்றை 74.9விழுக்காட்டினர் அறிந்து கொண்டுள்ளதாகவும் ஜப்பானிய பாசிச ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆசிய நாடுகளின் எதிர்ப்பில் சீனா உதவியளித்ததை 66.5விழுக்காட்டினர் அறிந்து கொண்டதாகவும் இக்கருத்துக் கணிப்பில் தெரிவித்தனர்.
