தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை காணப்பட்டு வரும் நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவின் பேரில் இன்று (செப்டம்பர் 26) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும், பெற்றோர் மற்றும் மாணவர்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.