திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ரங்கநாதப் பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 2 மரத் தேர்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த நிலையில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலின் மாசி மகா பிரம்மோற்சவ திருவிழாவின் தேர்த் திருவிழாவில் இரண்டு தேர்களும் முக்கிய மாட வீதிகளில் வலம் வந்தது. ஒரு தேரில் ஜலகண்டேஸ்வர பெருமானும், மற்றொரு தேரில் அம்மனும் உலா வந்தனர்.
இந்த வைபவத்தில் வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், மின்துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் உடன் களப் பணியாற்றினர்.