வட கொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்து

வட கொரியத் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவை

முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் அக்டோபர் 10ஆம் நாள், வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச்

செயலாளரான கிம் ஜொங் உன்னுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், வட கொரியத் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவை

முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சார்பிலும், தனிப்பட்ட பெயரிலும், வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர், மத்திய கமிட்டி, கட்சி உறுப்பினர்கள் மற்றும் அந்நாட்டின் மக்களுக்கு மனமார்ந்த இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 80 ஆண்டுகளில், இக்கட்சியின் தலைமையில், அந்நாட்டின் மக்கள் ஒற்றுமையுடன் பாடுபட்டு, இன்னல்களைச் சமாளித்து, சோஷலிச இலட்சியம் சார்ந்து அருமையான சாதனைகளைப் படைத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில், வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரைப் பல முறை சந்தித்துரையாடியதைக் குறிப்பிட்டுள்ள ஷிச்சின்பிங், இரு கட்சிகள் மற்றும் நாடுகளின் உறவுக்கான வளர்ச்சிக்குத் தலைமை தாங்கி, இரு தரப்புறவுக்கான புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், வட கொரியாவுடன் இணைந்து, நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, நெருக்கமான ஒருங்கிணைப்பை விரிவாக்கி, இரு தரப்புறவின் தொடரச்சியான வளர்ச்சியை விரைவுபடுத்தி, இரு நாடுகளின் சோஷலிச லட்சியத்தின் கட்டுமானத்தை முன்னேற்றி, உலகின் அமைதி, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமைக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றவும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author