கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாமக மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
கரூரில் நேற்று (டிசம்பர் 26) நடைபெற்ற நிகழ்வில், பாமக கரூர் மேற்கு மாவட்டத் துணைத் தலைவர் வாசுதேவன், அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் பாக்கியராஜ் மற்றும் விடுதலைக் களம் அமைப்பின் செயலாளர் உதயகுமார் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தனர்.
இவர்களுடன் திமுக உறுப்பினர்களான பாண்டியன், ராகுல், ரோகித் உள்ளிட்ட பலரும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் தங்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்குக் கட்சித் துண்டு அணிவித்து வரவேற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக இப்போதிலிருந்தே அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
