நார்வே செஸ் : குகேஷின் ஹாட்ரிக் வெற்றிக்கு செக் வைத்த ஹிகாரு நகமுரா!

Estimated read time 1 min read

நார்வே : செஸ் 2025 தொடர் மே 26 முதல் ஜூன் 6, 2025 வரை நார்வேயின் ஸ்டாவாங்கர் (Stavanger) நகரில் நடைபெறுகிறது. இந்த செஸ் தொடரில் தமிழகத்தை சேர்ந்த குகேஷும் விளையாடி வருகிறார். இந்த தொடரில் 6வது சுற்றில் கார்ல்சனை 3-0, 7வது சுற்றில் அர்ஜுன் எரிகைசியை வென்று குகேஷ் அசத்திய நிலையில் 8வது சுற்றில், ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டு அதிர்ச்சியான தோல்வியை சந்தித்துள்ளார்.

8வது சுற்றில், ஹிகாரு நகமுரா (வெள்ளைப் புரவுகளுடன்) குகேஷ் டோம்மராஜுவை (கருப்பு புரவுகளுடன்) கிளாசிக்கல் ஆட்டத்தில் வென்றார். செஸ்.காம் (Chess.com) தகவலின் படி, நகமுரா தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். நகமுராவின் துல்லியமான ஆட்டத்திற்கு முன்பு குகேஷ் தவறுகள் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய ஆட்டத்தில் (middlegame) அவரது நகர்வுகள் பலவீனமாக இருந்தன.

சற்று தடுமாறி கொண்டு விளையாடிய குகேஷ் இந்த சுற்றில் தோல்வி அடைந்ததன் மூலம் புள்ளி விவரப்பட்டியலில் கீழேயும் இறங்கினார். ஏற்கனவே புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த நிலையில், தோல்வியின் மூலம் 11.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு சென்றார். இது அவருக்கு பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

நார்வே செஸ் 2025, 8வது சுற்று புள்ளி விவரம்

  • பாபியானோ கருவானா: 12.5
  • அர்ஜுன் எரிகைசி: 11.5
  • மாக்னஸ் கார்ல்சன்: 11
  • குகேஷ் டோம்மராஜு: 8.5
  • ஹிகாரு நகமுரா: 8.5
  • வெய்யீ: 7.5

மேலும், 8-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த குகேஷ் அடுத்ததாக நார்வே செஸ் 2025 தொடரின் 9வது சுற்றில்,டோம்மராஜு வெய் யீ (Wei Yi)யை எதிர்கொள்ளவிருக்கிறார். இந்தப் போட்டி ஜூன் 4, 2025 அன்று, ஸ்டாவாங்கரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Please follow and like us:

You May Also Like

More From Author