ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றம்…..!! 

Estimated read time 1 min read

2023 உலகக்கோப்பையை வென்ற பிறகு, மிட்செல் மார்ஷ் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அன்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீழ்ச்சி, இன்று வரை நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனப் பெரிய தொடர்களில் அந்த அணி மண்ணைக் கவ்வியது.

அதுமட்டுமின்றி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை இழந்தது என ஆஸ்திரேலியாவின் ‘கெத்து’ மொத்தமாகச் சரிந்துவிட்டது.

தற்போது 2026 டி20 உலகக்கோப்பையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்று, சூப்பர்-8 சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது.

கோப்பையை அவமதித்ததால் தான் இந்த ‘சாபம்’ எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டையே மிரட்டிய ஒரு சாம்ராஜ்யம், இன்று கத்துக்குட்டி அணிகளிடம் கூட தோற்று நிற்பது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author