அமலுக்கு வரும் 8-வது ஊதியக்குழு?… எப்போது தெரியுமா?… காத்திருக்கும் அரசு ஊழியர்கள்…!!! 

Estimated read time 1 min read

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த 8-வது ஊதியக் குழு தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது 8-வது ஊதியக்குழு சரியான நேரத்தில் செயல்படுத்தப்பட்டால் லட்சக்கணக்கான ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த 8-வது ஊதியக்குழு எப்போது வரும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் கிடைத்துள்ள தகவலின்படி 2026 ஆம் ஆண்டின் 1-ம் தேதி முதல் இதனை அமல்படுத்த அரசு தயாராகி வருகிறது. ஆனால் இதை செயல்படுத்துவதில் சில தாமதங்கள் ஏற்படலாம். அப்படி தாமதம் ஏற்பட்டால் தகுதியுள்ள அனைத்து ஊழியர்களின் நிலுவையில் உள்ள சம்பளம் பின்னர் வழங்கப்படும்.

இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ. 18000 இருந்து 51480 ஆக அதிகரிக்கும். அதேபோன்று குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 இருந்து 25,740 ஆக உயரும். மேலும் மூன்றாம் நிலை ஊழியர்களின் சம்பளம் ரூ. 57,456 இருந்து 74 84 5 ஆக உயர்த்தப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author